அர்ஜுன் நடிக்கும் சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் கதை


சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் “வனயுத்தம்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் அர்ஜூனும், சந்தன வீரப்பனாக நடிகர் கிஷோரும் நடிக்கிறார்கள்.

படத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும், சுரேஷ் ஒபராய் கன்னட நடிகர் ராஜ்குமாராகவும் நடிக்கிறார்கள். ராஜ்குமாரின் மனைவியாக சுலக்ஷனா நடிக்கிறார். ரவிகாலே, சம்பத் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறார்கள்.

வேகமாக வளர்ந்து வரும் வனயுத்தம் படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தீப் சவுதா இசையமைக்கிறார். “குப்பி” படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் கதை-திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.

அக்ஷயா கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஸ்ரீனிவாஸ், ஜகதீஷ் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியிலும், தலக்கோணம் காட்டிலும் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

thanx vanakkam

0 comments:

Design by Blogger Templates