ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.
இப்போதெல்லாம் அதிகம் படம் பார்ப்பதில்லை. இந்த முறை தீபாவளி படம் ஏதாவது பார்க்கலாம் என்று நினைத்தேன். ஏழாம் அறிவு பற்றி பல பதிவுகளை படித்ததால் அதை தவிர்த்தேன். இருந்தாலும் விதி வலியதல்லவா! வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன். படம் சூப்பர் என்று ஏதோ ஒரு பதிவில் தலைப்பை மட்டும் பார்த்து முடிவெடுத்ததால் வந்த வினை.
ரா.சிவானந்தம்
Posted at 8:53 PM | | 0 Comments
சினேகா - பிரசன்னா விரைவில் திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர்.
இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.
இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்," என்றார்.
வாழ்த்துக்கள்!
நன்றி தட்ஸ் தமிழ் and தளிர்
Posted at 8:24 PM | | 0 Comments
புதிய பழமொழி
பழகப் பழக பாலும் புளிக்கும்
அது பழமொழி
என்னவளோடு ,
பழகப் பழக
புளித்த பாலும் இனிக்கிறதே
இது புது மொழி !
நன்றி எழுத்து
Posted at 6:46 AM | Labels: காதல் கவிதை | 0 Comments

காதலின் இனிய ரசிகர்களே
உங்கள் அனைவருக்கும்
இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
காதலின் அன்பார்ந்த ரசிகர்களே மீண்டும் உங்களுக்காக
சிறந்த காதல் கவிதைகளை எதிர்பார்க்கலாம்
இடையில் நிகழ்ந்த தடைக்கு வருந்துகிறோம்
Posted at 6:41 AM | | 0 Comments
jeans
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சன் அடி
சற்றே நிமிந்தன் தலை சுற்றி போனேன் அடடா அவனே வல்லனடி
மின்னலை பிடித்து துரிகை சமைத்து ரவி வர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்படு கொடுமையடி
Posted at 6:33 AM | Labels: காதல் கீதம் | 0 Comments

