நீ இல்லாமல் நான் இல்லை



எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!

உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!

உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!

இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?

காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!

நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…


கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க..
நகர மறுக்கிறது, உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.

என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.!!!

0 comments:

Design by Blogger Templates