எங்கிருந்தாய் இதுவரை நீ..
அன்புச் சிலையே என்ன இது இதயம் துடிக்கவில்லை இரவுகள் என்னை தலாட்ட அழகாய் பூத்திருந்த என் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் என்னை சுற்றி இந்த உலகமே இப்போது உனக்காக கொஞ்ச நேரம் நிற்கிறேன் மீதி நேரம் இருந்தால் செல்லம் என்ன இது இதுவரை நான் ஆனால் ஏனோ
ஆசைக் கிளியே
என்னை என்ன
செய்தாய்
சத்தம் மட்டும் அதிருது
மறுக்கிறது இரு விழிகளும்
சூரியனாய் சுட்டெரித்து உன்
நினைவுகளை படரவிடுகிறது
உன்னோடு இருக்கையில்
மெளனமே மொழியாகிறது
தனியாய் இருக்கையில்
ஏதேதோ பிசத்துவதே
என் மொழியாகிறது
இதயத்தில் புதிதாய் யாரோ
குடிவந்ததாய் உண்ர்கிறேன்
அன்பே தனியாய் உன் நினைவுகளை
திரையிட்டு உள்ளுக்குள் சிரித்து ரசிக்கிறேன்
வேடிக்கை பார்ப்பதறியாமல்
குழந்தைகளோடு குழந்தையாகி
கும்மாளமடிக்கிறேன்
காத்திருக்கும் நேரமிது
கொஞ்ச நேரம் இருக்கிறேன்
கொஞ்ச நேரம் சாய்கிறேன்
கொஞ்ச நேரம் நடக்கிறேன்
கொஞ்ச நேரம் கவி எழுதுகிறேன்
செய்ததையே திருப்பிச்
செய்கிறேன்
என்னை என்ன செய்தாய்
எப்படிப்பட்டவனாக
இருந்தேன் என்று தெரியாது
இப்பொழுதெல்லாம்
கவிதை எழுதும் போது
காகிதங்களை காயப்படுத்துவதாய்
உணருகிறேன்
அன்பே என்னை
என்ன செய்தாய்
Posted at 1:50 AM | Labels: காதல் கவிதை |
0 comments:
Post a Comment