ஏதேதோ...நினைவு!

எங்கெங்கோ.....
பிறந்தோம்!

எங்கெங்கோ
வளர்ந்தோம்!

ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!

தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்

நீ மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்

உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ளத்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!

மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்

இது போதும்......நமக்கு!!!

காதலிடம் யாசிக்கிறேன.....

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும் ....
எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ கற்றுக்கொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...

நமக்கான வாழ்வின்
பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது...

எனக்கான உன் தவிப்பும்...
உனக்கான என் அக்கறையும்...
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...

உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்றும் வாழவைக்கிறது...


இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது
என் உயிர் பிரியும்
வரம் வேண்டி
நம் காதலிடம் யாசிக்கிறேன்!

உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை !


மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லபடுவேன்
பள்ளியறைக்கு.


===========காதலன் கூறுவது===========
அவளுக்கு !
மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் என்றாள்
என் கண்ணீரையே மழையாக்கினேன்
-அன்புடன் காதலன் .......!


அவளுக்கு !
மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் என்றாள்
அவளை காதலித்த பிறகுதான் தெரிந்தது
அது மழை அல்ல என் கண்ணீர் என்று
-கண்ணீருடன் காதலன் ........!
=========காதலன் கூறுவது==========Design by Blogger Templates