இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்
 
இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடித் திரியும்
பொழுதுகளில்

இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள். 

  thanx : net

அதிசயம் ஆனால் உண்மை


என் 
பெயரினை 
எழுதி,
கண்ணாடியில் 
பார்த்தேன்..

அதிசயம் 
ஆனால் 
உண்மை!!!!

என்னவளின் 
பெயர் தான்
பிம்பமாய் 
விழுந்தது

இது 
மேஜிக் 
அல்ல.. 
காதல் !

ராசியும் காதல் பலன்களும்

மேஷம்
..............
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்

ரிஷபம்
............
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்
..............
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
...........
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது
சிம்மம்
............
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்


கன்னி
...........
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
..............
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
..................
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.


தனுசு
..........
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
...........
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
...........
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
..........
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

உனக்கே உனக்காய்....


உனக்கே உனக்காய் நான் இருக்க
எனக்கே எனக்கென என்னிடம்
ஓர் கவிதை கேட்கிறாய்

சப்த ஸ்வரங்களும் ஒற்றை
ஸ்வரமாகி உன் பெயரை
என்னுள் எழுதிட.........

நாடியும் நரம்பும் உனக்கென துடித்திட
என்னுள் ஒலியை எழுப்பி விட்டு
ஓய்வு எடுக்க நீ சென்று விட்டாய்
மொழியின் சொற்கள் எல்லாம்...............

உன் வழி தேடி காத்து இருக்க
நீ தொட்டு துடைத்த ஒரு
துளி கண்ணீரும் ஓவியமாகி
என் பெயர் எழுதிவிடும்!!!!!!!!!!

உனக்கு ஆதிக்கவும் தெரியும்
சாதிக்கவும் தெரியும் ஆனாலும்
ஆனவமேயின்றி அமைதியாய் வந்து
உனக்கே உனக்கென ஒரு கவிதை கேட்கிறாய்!!!!!!!!!!!!!!

உலகமும் தெரியும் உண்மையும் புரியும்
ஊர் மொத்தமும் உன்னை அறியும்
ஆனாலும் என் அருகில் வந்து
ஆழ்னிலை சொன்னாய்..................

நேற்று அறிந்த உன் முகவரிக்கு
இன்று நான் முதலாளி
உன்னுள் ஒவ்வொருவருக்கும்
ஓரிடம் ஆனால் உன் உள்ளம்
முழுவது என்னிடம்
உன் மொத்த சுழலில் நான் இருக்க!!!!!!!!!!!

நன்றி :எழுத்தோசை

காதல் கவிதைகள்

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

thanx : net

அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு
 
ஆசையை அப்ளிகேஷன் போடு

இங்கிலீஷில் பீட்டர் விடு

ஈமெயிலில் ஆட்டின் அனுப்பு

உம்மா உம்மம்மா பண்ணு

ஊரெல்லாம் உன் லவ்வை பரப்பு

எதுக்கெடுத்தாலும் கிரீட்டிங் அனுப்பு

ஏகப்பட்ட குதாம்ஸ் காட்டு

ஐஸ்க்ரீமா வாங்கிக் குடு

ஒன்ஸ்மோர் போலாமானு கேளு

ஓட்டல்களில் துட்டு அழு

ஒளவையாரா பிலிம் காட்டறாளா…


காதலே வருவாயா


உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்

உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான்
விரும்பவில்லை

கவிதைக்காய்
காத்திருப்பதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்

உனக்காய் காத்திருந்து என்
எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே

என்னைக் காக்க வைத்து விட்டு
வரும் போது கவனம் நீந்த நேரிடலாம்
என் கவிதையின் கண்ணீரில்

இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்

காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்

கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய் என்று
பொய் சொல்லுகிறேனோ

உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்

இனியவளே

இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று

என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன் எல்லா
பூக்களும் சிரிக்கிறது

***************************
அழகான பூவாக
இருந்தாலும்
பூக்கடையில் பூ
வாங்க பிடிக்காது

அவர்கள் யாரை
நினைத்து பறித்தார்களோ
யாருக்கு தெரியும்

*************************
தயவு செய்து
என்னை கவிஞன்
என்று எப்போதும்
ஏற்றுக்கொள்ளாதே
ஏனெனில்

ஒவ்வொரு தடவையும்
நான் உண்மை சொல்லும்
போதும் உன்னிடம் உண்மை
சொல்லவாவென கேட்டு விட்டு
சொல்ல வேண்டி வரும்

***********************

என் நம்பிக்கைதான் நீ என்று சொன்ன

பின்னும் உன் வாழ்க்கையை தர மறுத்தால்

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது பொய்த்து

விடுமல்லவா நீயே சொல்…….


உனக்கே நான்

ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை

உன்னைத் தேடித்தான் உலகம் சுற்றப் புறப்பட்டேன்
என்ன அதிசயம் என் வீட்டு வாசலிலே உன்னை
இறக்கி விட்டுப் போனது நீ சுற்றி வந்த தெய்வம்

உன்னை வைத்துக் கொண்டு உலகம் சுற்றிய
களைப்பில்த்தான் புரிந்து கொண்டேன்_ உன்னைவிட
யாரும் எனக்கு பொருத்தமில்லை என்பதை

என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலனாய் உன் கணவனாய்
ஆதலால் உனக்கே உரியவன் நான்.


இறந்துவிட்ட கலைஞனின் உக்காத நினைவுகள்
விதைக்கப் படும் புதைகுழி
....

உன் காதல் போதும்

நீ வேண்டாம் உன் காதல் போதும்
நான் அதில் என்னை கரைத்துக் கொள்வேன்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விடு போதும்..

மௌனம் அழகுதான் உனக்கு
அதனால் எப்போதும் அழுகைதான் எனக்கு

கொஞ்சம் சிரிக்கலாமே 
உன் கத்திப் பார்வையினால்

Design by Blogger Templates