காதல் என்றால் என்ன?


காதல் என்றால் என்ன?

நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....

நான் சொன்ன பதில்

வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.

சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய்
வெற்றுப் பையுடன் ஏங்கும்
ஏழைகளின் அங்கலாய்ப்பு.

காதலின் பின் உன் மூளைக்கும்
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா
இரண்டிலுமே கவலைப் புழுதியால்
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.

அடிக்கடி சிரித்துக்கொள்வாய்
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட
ஏன் தெரியுமா
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

அவர்களுக்கு தெரியாது போலும்
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று
அது தெரிந்தால்
அவர்களும் ...
வேண்டாம் எதற்கு இந்த வம்பு

என் உயிர் நீ


நான் சிரித்ததன் காரணமும்
நீதான்
நான் அழுவதன் காரணமும்
நீதான்
இன்று நடைப்பிணமாய் அழைகிறேன்
உன்னால் உயிரே - நீ இல்லை
என்றாலும்
என் உயிர் உன்னை தொடரும்
நான் வாழும் வரை
வாழ்ந்து சாகும் வரை


முதல் முதலாக
நீ என்னை எழுத்துக்கூட்டி
வாசித்து முடித்தபோது

எல்லாக் கவிதைகளைப்
போலவும் நானும் உன்
வாழ்த்துக்காய் காத்திருக்க
முன்னமே

"என்றும் நீ எனக்குப்
பிடித்த கவிதையாக
இருந்துவிட முடியாது
ஏனெனில்
எழுத்துப் பிழைகள்
அதிகம் நிறைந்த
கிறுக்கலாய் இருக்கிறாய்"

என நீ கூறிவிட்டு
என்னை கசக்கி
எறிந்த இடம்

இன்றும் என்னை
கண்ணீரால் கவி
எழுத வைக்கிறது

காதல் கவிதை


இது மயிலடும் நேரம்..


கருப்பு மேகமெல்லாம்
கால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....

மழையெனும் மகள்
மண்ணுக்கு
முத்தமிடும் கோலம்

மழையிட்ட முத்தத்தில்
மண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....

தாகம் கொண்ட
செடிகள் எல்லாம்
தண்ணீர் தாகம் தீர.....

வானம் பார்த்த பூமியை
நம்பி வாழும்
பொக்கைவாய் கிழவரும்
வேகம் கொண்டு ஆட

மொத்தத்தில் இது
பொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்

காதல் கதை

அதிகாலை 3 மணி ஊரே தூங்கிக்கொண்டிருக்கிறது.தன் அறை கதவை மெல்ல திறந்து வெளியே வந்தாள் ரேவதி,பக்கத்து அறையில் தன் பெற்றோர் நன்கு தூங்குவதை உறுதிசெய்தபின், தான் ஏற்க்கனவே தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

மெல்லிய நிலா ஒளி வீசுகிறது, மயாணத்தை கடக்கும் வழிபோக்கனை போல் பயந்தபடியே நடந்து தெருமுனையை அடைந்தாள். அங்கு அவளுக்காக காத்திருந்தான் ரமேஷ். இருவரும் காரில் ஏற கார் வேகமாக புறப்பட்டது

5 மணி, தூங்கிக்கொண்டிருந்த பார்வதி பால்காரன் சப்தம்கேட்டு எழுந்தார். பாலை வாங்கி அடுக்களையில் வைத்துவிட்டு தன் காலை பணிகளை துவக்கினார்

6 மணி , தங்களின் திட்டப்படி இருவரும் கோவிலை
வந்தடைந்தனர்.அங்கு அவர்களின் வருகைக்காக காத்திருந்த நன்பர்கள் குழு அவர்களை வரவேற்றது.

“ஏண்ட மாப்ளே லேட்டு”
“ரேவதி வர்ரத்துக்கு லேட்டாயிடுச்சு”
“சரிசரி அங்கபோய் குளிச்சிட்டு அதுல இருக்கிற புதுத்துணிய போட்டுக்கிட்டு சீக்கிரமா ரெடியாகுங்க , ம்ம் சீக்கிரம்.”

பாலை காய்ச்சி வைத்துவிட்டு தன் மகளை எழுப்புவதற்க்காக
அவள் அறைக்கு செல்கிறார். மகள் அங்கு இல்லாதது கண்டு மொட்டை மாடியில் சென்று பார்த்தார், வீடு முழுதும் தேடியும் தன் மகள் இல்லாததால் பதற்றமாகி தன் கனவர் கேசவனை எழுப்புகிறார்.
“என்னங்க ரேவதிய காணலங்க”
“நல்லா தேடிப்பரு தோட்டத்து பக்கம் உட்காந்து படிச்சுகிட்டிருப்பா”
“எல்லா பக்கமும் தேடிட்டேங்க , எங்கேயும் காண்ல”
“என்ன சொல்ற நல்லா பாத்தியா?”- என்று கேட்டுக்கொண்டே எழுந்து தன் மகளின் அறைக்கு வருகிரார்.அங்கே அவள் இல்லை
கட்டிலின் மேல் ஒரு கடிதம் இருக்கிறது. வீட்டைவிட்டு ஓடிபோகும் எல்லோரும் எழுதிவைக்கும் அதே கடிதம். பிரபு..
“ என் மகளா இப்படிபண்ணீட்டா?” - என்று தன் நெஞ்சில் கைவைத்துதபடி தரையில் சாய்ந்தார்.

இருவரும் உடை மாற்றிக்கொண்டு வந்தார்கள். “ மாப்ள இப்பத்தாண்ட நீ நிஜமாவே மாப்ள” - என்று ஒரு நன்பன் கிண்டல் செய்ய அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.

கேசவன் கீழே விழுந்ததும் பார்வதியிட்ட சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கேசவனின் நிலையையும் கையில் இருக்கும் கடிதத்தையும் பார்த்ததும் அவர்கள் விவரம் புரிந்துகொண்டார்கள். “எல்லாரும் இப்படி பாத்துக்கிட்டெ இருந்தா எப்படி, யாராச்சும் டாக்டருக்கு போன் பண்னுங்க” என்றதும் ஒருவர் போன் செய்ய சென்றார்.

“ ம்ம்ம்ம் ஸ்கூல்ல வாத்தியார இருந்தவரு,வயசு பொண்ணுக்கு படிப்பென்னத்துக்குனு சொந்தகாரவுக சொன்னதயேல்லா கேக்காம “யேம் புள்ளய பெரியபடிப்பு படிக்க வைப்பேன்னு” சொல்லி காலேசு அனுப்பிவச்சாரு ,அது என்னடான அப்படி பண்ணிபுடுச்சு.ம்ம்ம்ம் எல்லா தலையேழுத்து” - என்று கூட்டத்திலிருந்த ஒருவரின் பேச்சு அரைமயக்கத்திலிருந்த கேசவனின் காதில் விழ, அவர் கண்களில் இருந்து இறுதியாய் கண்ணீர் கசிந்தது.

“மாப்ள உறவுக்காறங்க இல்லேனு வருத்தப்படத எல்லாத்துக்கும் சேத்து நாங்க இருக்கொ(ம்), மேளதாளம்,ஐயர் எல்லாம் ரெடி நீ தாலி கட்டவேண்டியதுதான் பாக்கி “ என்றான் ஒருவன்.ஐயர் மந்திரங்கள் ஓத துவங்கினார்

டாக்டரின் வாகனம் வந்து வாசலில் நின்றது.உள்ளே வந்த டாக்டர் கேசவனை பரிசோதித்தார்.சிறிது மௌனத்திற்க்கு பிறகு
“சாரி சார் உயிர் போயி ரொம்பநேரமாயிடிச்சு..” என்றார்.

மேளதாளங்கள் முழங்க ரேவதியின் கலுத்தில் தாலிகட்டினான் ரமேஷ்.தங்கள் கனவு நினைவான மகிழ்ச்சியில் ரமேஷ்,ரேவதியின் முகத்தில் கோடி புன்னகைகள்
மார்பிலும் வயிற்றிலும் அடித்துஅழுதுகொண்டிருக்கிறாள் பார்வதி..

இதுதான் காதல்


தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!

சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல்
சஞ்சரிக்கும் நதியதற்கோ கடலில் காதல்
அருவிதினம் ஊற்றெடுத்து நதியில் பாயும்
அலைகடலில் தலைவைத்து நதியும் சாயும்!

பஞ்சுநிகர் முகிலதற்கோ நிலவில் காதல்
பனிபடர்ந்த மலைமீதே நிலவின் காதல்
கெஞ்சிமுகில் சிலவேளை நிலவைப் பார்க்கும்
கொஞ்சிவிட நிலவந்த மலையை நோக்கும்!

இமைகளுக்கோ கண்மீது இருக்கும் காதல்
இருவிழிக்கும் அதைமீறி அப்பால் காதல்
இமைமூடித் தனையந்த விழிக்குக் காட்டும்
இருவிழியும் அதைவிட்டு வெளியே நோக்கும்!

வான்மழைக்கு நிலன்மீது வளரும் காதல்
வன்நிலமோ நெருஞ்சிக்கே மார்பு காட்டும்
வான்மழையின் மென்துளியை விரும்பா மண்ணோ
வளர்நெருஞ்சி முட்கீறும் நோவுக்கு ஏங்கும்!

தனையடக்கித் திசைவகுக்கும் துடுப்பைக் காவிக்
காதலித்து மகிழ்ந்திருக்கும் ஓடம் என்றும்
அலையெனும்கை மெதுவாக எடுத்து ஏந்தும்
ஆறுகளைப் பார்க்காது இதுதான் காதல்!

வாழும் காலங்கள்

வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே வாழ்ந்து தான் பார்ப்போமே வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே செல்லும் பாதை இங்கே பார்த்தால் கல்லும் முள்ளும் கரடும் முரடும் கண்கள் திறந்தே நாமும் வைத்தால் காலம் முழுதும் மகிழ்வோமே உள்ளம் முழுதும் உண்மை வைத்தால் உன்னை வெல்ல உலகில் எவருமில்லை வெள்ளம் போலே இன்பம் பொங்கும் வேறு வாழ்வில் ஏதுமில்லையே சொல்லச்சொல்ல நீயும் திருந்து சோகம் தீரும் உன்னைக் களைந்து சொந்தபந்தம் எல்லாம் உணர்ந்து சொர்க்கமாகும் வாழ்க்கை விருந்து

நீ இல்லாமல் நான் இல்லை



எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!

உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!

உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!

இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?

காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!

நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…


கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க..
நகர மறுக்கிறது, உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.

என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.!!!

காதலும்..... காமமும்.....!

வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்

காதல் என்பதா...........??

ஒற்றை சிறகு கொண்டு
சுற்றி பார்க்கும் கிளி போல்
தத்தை நெஞ்சு தத்தளிக்குதே...
தூங்கும் போது விழித்து
நான் விழித்த பின்பும் கனவில்
வயது என்னை வம்பு செய்யுதே...

மாலை நேரம் வந்தால்
என்மனதில் நாணம் இல்லை
மார்பில் உள்ள ஆடை
என் பேச்சை கேட்கவில்லை
இதய கோடையில்
பூக்கள் எரியுதா
இதற்க்கு பேர் காதல் என்பதா...


மனசில் மையம் தேடி
புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையை கடக்குமோ...
கடலில் அலைகள் போலே
என் உடலில் அலைகள் தோன்றி
கும்மி கொட்டி கொந்தளிக்குமோ...

என்ன நேரும் என்று
என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால்
அதில் ரசனை ஏதுமில்லை
என்னை கொல்வதா
இளைய மன்மதா
இதற்க்கு பேர் காதல் என்பதா...

காதல் என்பதா.......................... ????

முத்தம்


முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

ஓவியம்




இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?




புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!




கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!





சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!


காற்று


காட்ரோடு
கலந்துவிட்ட
பூக்கலின்
வாசமும்
என்னொடு
லந்துவிட்ட
உன் அன்பின்
நெசமும்
ஒரு நாலும்
பிரியது
‌‌‌‌

Design by Blogger Templates