அர்ஜுன் நடிக்கும் சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் கதை

சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் “வனயுத்தம்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் அர்ஜூனும், சந்தன வீரப்பனாக நடிகர் கிஷோரும் நடிக்கிறார்கள்.

படத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும், சுரேஷ் ஒபராய் கன்னட நடிகர் ராஜ்குமாராகவும் நடிக்கிறார்கள். ராஜ்குமாரின் மனைவியாக சுலக்ஷனா நடிக்கிறார். ரவிகாலே, சம்பத் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறார்கள்.

வேகமாக வளர்ந்து வரும் வனயுத்தம் படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தீப் சவுதா இசையமைக்கிறார். “குப்பி” படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் கதை-திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.

அக்ஷயா கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஸ்ரீனிவாஸ், ஜகதீஷ் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியிலும், தலக்கோணம் காட்டிலும் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

thanx vanakkam

மங்காத்தா பிரபுவின் அடுத்த படம் கோதா இல்லை

நான் இயக்கும் அடுத்த படம் கோதா இல்லை என்று வெங்கட் பிரபு ட்விட்டர் இணையத்தில் கூறியுள்ளார்.

சென்னை- 600028 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கோதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சென்னை-28 படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதாக அப்படத்தின் புகைப்படங்களோடு இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இச்செய்தி குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் கூறியிருப்பதாவது, எனது அடுத்த படம் கோதா இல்லை. அந்த புகைப்படங்களை ரசிகர் ஒருவர் தயார் செய்து வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது அடுத்த படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது அடுத்த படத்தைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபுவின் இந்த செய்திக்கு பிரேம்ஜி அமரன் குறும்பாக படப்பிடிப்பிற்கு என் திகதிகள் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நன்றி : cineviddupu

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரத்துடன் முருகதாஸ் பதிலளிப்பார்

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை ஏ.ஆர். முருகதாஸ் சேகரித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஏழாம் அறிவு. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மனுக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள் என்பதை ஏழாம் அறிவு படத்தில் காட்டி இருந்தனர்.

தற்போது பலர் போதிதர்மன் தமிழர் இல்லை என்று பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பதற்கு எழுத்து பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஏழாம் அறிவு படம் குறித்த சூர்யாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா இக்கேள்விக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் பதிலளிக்க வேண்டும். விரைவில் அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் பிறந்தார் என்பதற்கு பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்களையும், புகைப்படங்களையும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களோடு கலந்து பேசி சேகரித்து வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

விரைவில் ஆராய்ச்சியாளர்களோடு ஏ.ஆர்.முருதாஸ் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக கொலிவுட் செய்திகள் தெரிவிக்கின்ற

நன்றி : cineviduppu

விசேஷ தினத்தில் விசேஷ வரவு !!!

இன்றைய நாளில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன் மட்டும் இன்றி நாடும் உலகமும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயம் ஐஸ்வர்யா பச்சனிற்கு பிறக்கப்போகும் குழந்தையை பற்றிதான், ஏன் இவ்வளவு சுவாரஸ்யம் என்றால், இந்த ஆண்டிலேயே மிக மிக விசேஷமாக கருதப்படும் நாள் நாளை - 11.11.11

அனைவரும் எதிர்பார்ப்பது இந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்று பச்சன் குடும்பமே பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது. மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரர்களும், தனியார் நிறுவன பாதுகாப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், யாரும் படம் எடுக்க கூடாது என்பதற்காக யாருக்கும் மருத்துவமனையின் உள்ளே அலைபேசி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியுடன் நடிக்க பயந்தேன்!

ஸ்ருதிஹாசனுடன் நடிக்க பயந்ததாக கூறுகிறார் சூர்யா.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்தார் சூர்யா. அப்போது சில நாட்களாகவே அவருடன் நடிக்க தனக்கு பயமாக இருந்ததாக கூறினார்.

இதுபற்றி சூர்யா கூறுமபோது,

ஸ்ருதிஹாசன் என்னைவிட ஜூனியர்தான். என்றாலும் அவருடன் இணைந்து நடித்தபோது சில நாட்களாகவே அவரைப்பார்க்கும்போதும், அவர் நடக்கும்போது கமல் சாரைப் போலவே இருந்தார். அதனால் இரண்டு நாட்கள் அவருடன் பயத்துடனேயே நடித்தேன். அதன்பிறகு அந்த பயம் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகியது. அதன் பிறகுதான் சகஜமாக நடித்தேன் என்கிறார் சூர்யா

நன்றி http://www.sivajitv.com

ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.

ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. என்னை டெண்ஷனாக்குவதில் சாப்பாட்டுக்கும் முக்கிய பங்கிருப்பதால், இது உச்சக்கட்டத்தை அடையும் போது அதை தணிக்க நான் செய்வது இரண்டுதான். ஓன்று, அன்று ஓட்டலுக்கு போய் வயிறு வெடிக்கும் அளவுக்கு திருப்தியாய் சாப்பிடுவது. இரண்டு, நல்ல சினிமா பார்ப்பது.

கடலூரில் நான் மினி லைப்ரரி வைத்திருந்ததால், முக்கியமான வார இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன். எனவே விமர்ச்சனம் படித்துவிட்டுதான் பெரும்பாலும் போவேன். இருந்தாலும் சில சமயம் திடீர் முடிவோடும் போவதுண்டு. கடலூரில் அனைத்து தியேட்டரும் பஸ் ஸ்டான்ட் சுற்றியே இருப்பதால், வண்டியில் அப்படியே எல்லா தியேட்டரையும் சுற்றி வருவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் அது நல்ல படம் என்ற தியரியை நம்பிப் போவேன். அதிலும் ஏமாறுவது உண்டு. சில சமயம் என் சிந்தனையும், ரசனையும் மக்களோடு ஒத்துப் போகாது.

இப்போதெல்லாம் அதிகம் படம் பார்ப்பதில்லை. இந்த முறை தீபாவளி படம் ஏதாவது பார்க்கலாம் என்று நினைத்தேன். ஏழாம் அறிவு பற்றி பல பதிவுகளை படித்ததால் அதை தவிர்த்தேன். இருந்தாலும் விதி வலியதல்லவா! வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன். படம் சூப்பர் என்று ஏதோ ஒரு பதிவில் தலைப்பை மட்டும் பார்த்து முடிவெடுத்ததால் வந்த வினை.

இன்று சினிமாவில் யதார்த்தத்தை எதிர்பார்ப்பது என்பது அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது போன்றது. அபூர்வமாக இருக்கும். இருந்தாலும் நம்பி ஏமாறுவதுதானே நம் தலையெழுத்து. அதேபோல்தான் வேலாயுதத்திடம் ஏமாந்தேன்.

படத்தின் ஆரம்ப காட்சிகளே உணர்த்திவிட்டது, இது ஒரு அபத்தமான படமாக இருக்கப் போகிறது என்பதை. இருந்தாலும் முதல் சில காட்சிகளிலேயே வெறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டதால், அதன் பிறகு வந்த காமெடிகள் கொஞ்சம் கலகலப்பை உருவாக்கின. இந்த படத்தின் காமெடியை மட்டும் ரசிக்கலாம்.

இன்று சினிமா என்பது சாதாரண மனிதனின் ஆசையை அல்லது கனவை நனவாக்கி காட்டும் ஒரு பேண்டசிதான். எனவே கொஞ்சம் மிகைபடுத்தல் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது இப்போது ஜீரணிக்க முடியாத அளவுக்கு போய்கொண்டிருகிறது. இப்போது டைரக்டர்களும் அரசியல்வாதிகளை போல் ஆகிவிட்டார்கள். நாம் என்ன சொன்னாலும் இந்த மக்கள் நம்புகிறார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே வந்துவிட்டது. எனவே இஷ்டத்துக்கு காதில் பூ சுத்துகிறார்கள்.

இந்தியாவின் மிக மோசமான அரசியல்வாதி கூட இப்படி இருக்க மாட்டார். அப்படி காட்டுகிறார்கள் அரசியல்வாதியை. ஹீரோவையோ கேட்கவே வேண்டாம். நம் நாட்டுக்கு இராணுவமே தேவை இல்லை. நமது நான்கு எல்லைகளையும் காக்க நான்கு ஹீரோக்களே போதும். முக்கியமா உளவுத் துறையே வேணாம். எல்லாம் ஹீரோவுக்கு அத்துபடி. கஷ்டம்டா சாமி.

படத்தில் பாட்டும் ஒட்டவில்லை, காட்சிகளை நேர்படுத்திய விதமும் சரி இல்லை. சினிமா என்பது ஏதோ ஒரு சம்பவம் அல்லது கதை என்ற அளவில் இருந்தால் ரசிக்கலாம். இந்த வகையில் நான் கடைசியாக பார்த்து ரசித்தது குள்ள நரி கூட்டம். ஒரு தனி மனிதனின் காதலை இயல்பாக காட்டியதோடு அதில் சில சமூக விரோதிகளையும் காட்டி அவர்களை மடக்கும் விதம் ரசிக்கும்படியும், சாத்தியமாகவும் இருந்தது.

அல்லது முழு என்டர்டைன்மென்ட் என்ற வகையில் இருந்தாலும் பரவாயில்லை (எந்திரனை போல்). லாஜிக் எல்லாம் பார்க்காமல் அதை ரசித்துவிட்டு வரலாம்.

சமூக அக்கறை என்ற நோக்கில், அதாவது ஹீரோ கடைசியில் மக்களுக்கு நாட்டு நலன் குறித்து உபதேசம் செய்கிறார் என்ற வகையில் படம் எடுத்தால், அதில் காட்சிகளிலும் மற்றும் தீர்வுகளிலும் கொஞ்சமாவது யதார்த்தத்தை காட்ட வேண்டாமா? இதில் அது மருந்துக்கும் கிடையாது.

இந்த படத்தில் ஒரு காமெடி. விஜயின் தங்கை சரண்யா எல்லோருக்கும் சாப்பாடு கொடுப்பார். அது உப்புமா என்று அவர் சொன்ன பிறகுதான் மற்றவர்களுக்கு அது உப்புமா என்று தெரியவரும். அதுவரை அது ஏதோ ஓன்று என்று நினைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல் இந்த படத்தின் டைரக்டர் இது காமெடி படம் அல்லது சீரியசான சமூக அக்கறை கொண்ட படம் என்று தெளிவுபடுத்தினால்தான் நம்மால் இது என்ன வகையான படம் என்று ஒரு முடிவுக்கு வர முடியும்.

இது வேறு ஒரு யதார்த்தம்.

சினிமாவில் நாம் யதார்த்தத்தை பார்க்கக் கூடாது. ஆனால் இந்த யதார்த்தம் தவிர்க்க முடியாதது. எல்லோராலும் எப்போதும் சிறந்ததை தரமுடியாது. 5 வெற்றி படத்தை கொடுக்கும் டைரக்டர் இடையில் ஒரு மொக்கை படத்தையும் கொடுப்பார். அதீத தன்னம்பிக்கையோ அல்லது அலட்சியமோ ஏதோ ஓன்று இதற்கு காரணமாக இருக்கும்.அல்லது விளையாட்டு வீரர்களுக்கு சொல்வதைப் போல் அவுட் ஆப் ஃபார்ம் என்றும் சொல்லலாம்.

நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தியரிக்கு அவ்வப்போது பலியாக வேண்டும். நானும் இதுவரை 60 பதிவுகளுக்கும் மேல் எழுதி இருக்கிறேன். அதில் எத்தனை...? ஒவ்வொரு பதிவையும் கவனத்தோடும் அக்கறையோடும்தான் எழுதுகிறோம் . இருந்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் அதில் உள்ள குறையை நம்மால் உணர முடியாது. சில பதிவுகளை சற்று காலம் கடந்து படித்து பார்த்தால், அதை இன்னும் சற்று மேம்படுத்தி இருக்கலாம் என்று தோன்றும். அப்படி திருத்தியும் இருக்கிறேன்.

டைரக்டர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் எடுத்த படத்தை அவர்களே போட்டு பார்த்தால் அவர்களுக்கு அது சிறப்பாகத்தான் தோன்றும். அதை நம்பித்தான் நாங்கள் அப்படி எடுத்திருக்கிறோம் இப்படி எடுத்திருக்கிறோம் என்று இவர்கள் பில்டப் கொடுக்கிறார்கள்.

வேலாயுதத்தை விட ஏழாம் அறிவை மக்கள் அதிகம் எதிர் பார்த்திருப்பார்கள். காரணம் கதை மட்டுமில்லை. முருகதாசும் சரி, சூர்யாவும் சரி நாங்கள் மசாலா டைப்பை சேர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் இதுவரை யதார்த்தமான படத்தையே கொடுத்தவர்கள். எனவே எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். அடுத்த முறை கவனமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

சினேகா - பிரசன்னா விரைவில் திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:

சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்," என்றார்.

வாழ்த்துக்கள்!

நன்றி தட்ஸ் தமிழ் and தளிர்

புதிய பழமொழி

பழகப் பழக பாலும் புளிக்கும்
அது பழமொழி
என்னவளோடு ,
பழகப் பழக
புளித்த பாலும் இனிக்கிறதே
இது புது மொழி !

நன்றி எழுத்து

காதலின் இனிய ரசிகர்களே
உங்கள் அனைவருக்கும்
இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

காதலின் அன்பார்ந்த ரசிகர்களே மீண்டும் உங்களுக்காக
சிறந்த காதல் கவிதைகளை எதிர்பார்க்கலாம்

இடையில் நிகழ்ந்த தடைக்கு வருந்துகிறோம்

Design by Blogger Templates