ரொமான்ஸ் தேசம்

உன் காதல் திசையை நோக்கி
நடக்க செய்யும் என் கால்களின்
அனிச்சை செயலை
என்னவென்று சொல்வது?

பார்......
அவைகளும் உன்னை நோக்கி
காதல் கடிதம் நீட்டுவதை..

உன் இதழ்களை பார்க்கையில்
இரும்புகளிலும் காதல் மலர்கிறது.
நான் மட்டும் எம்மாத்திரம்?
காணவில்லை என்று டாக்டர் சொன்னார்.
அவருக்கு எப்படி தெரியும்,
அந்த காணாமல் போன பகுதிதான்,
என்னுள் நீ நுழைய
நான் உனக்கு
கொடுத்திருக்கும் கடவுச்சீட்டு என்று...
எந்த பைத்தியக்காரன் சொன்னான்?
அடைத்து வைக்க பிடிக்காது.
ஆனால் என் அணைப்பில் இருந்து என்றுமே
உனக்கு விடுதலை கிடையாது
உன்னால் தண்டவாளங்கள்
தடுமாறி தடம் மாறுகின்றன.
விபத்துகளுக்கு
உன்னை காரணம் காட்டப்போகிறதாம்
ரயில்வேதுறை....
நன்றி : கவிதை காதலன்
Posted at 6:42 AM | Labels: காதல் கவிதை |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment