கன்னங்களோடு பேசிவிட்டு போஉன் இதழ்கள்
என் காதுகளோடு பேசுவதை விட,
என் கன்னங்களோடு பேசுவதுதான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ !
காதல் என்ற கைவிலங்கால்
உன்னில் என்னை பூட்டிக்கொண்டு
சாவியை தொலைத்துவிடு
என்னை கொஞ்சும் போது
உன்னிலிருந்து வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது
உன்னிலிருந்து வெளிப்படும்
காதலே மிக அழகு .
உன்னுடன் இருக்கும் இன்பத்தை விட
உனக்காக காத்திருக்கும்
இன்பம் மிகப்பெரியது.

0 comments:

Design by Blogger Templates