விசேஷ தினத்தில் விசேஷ வரவு !!!


இன்றைய நாளில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன் மட்டும் இன்றி நாடும் உலகமும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயம் ஐஸ்வர்யா பச்சனிற்கு பிறக்கப்போகும் குழந்தையை பற்றிதான், ஏன் இவ்வளவு சுவாரஸ்யம் என்றால், இந்த ஆண்டிலேயே மிக மிக விசேஷமாக கருதப்படும் நாள் நாளை - 11.11.11

அனைவரும் எதிர்பார்ப்பது இந்த நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்று பச்சன் குடும்பமே பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது. மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரர்களும், தனியார் நிறுவன பாதுகாப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், யாரும் படம் எடுக்க கூடாது என்பதற்காக யாருக்கும் மருத்துவமனையின் உள்ளே அலைபேசி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Design by Blogger Templates