மங்காத்தா பிரபுவின் அடுத்த படம் கோதா இல்லை

நான் இயக்கும் அடுத்த படம் கோதா இல்லை என்று வெங்கட் பிரபு ட்விட்டர் இணையத்தில் கூறியுள்ளார்.

சென்னை- 600028 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கோதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சென்னை-28 படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதாக அப்படத்தின் புகைப்படங்களோடு இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இச்செய்தி குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் கூறியிருப்பதாவது, எனது அடுத்த படம் கோதா இல்லை. அந்த புகைப்படங்களை ரசிகர் ஒருவர் தயார் செய்து வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது அடுத்த படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது அடுத்த படத்தைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபுவின் இந்த செய்திக்கு பிரேம்ஜி அமரன் குறும்பாக படப்பிடிப்பிற்கு என் திகதிகள் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நன்றி : cineviddupu

0 comments:

Design by Blogger Templates