காதல் கவிதை


இது மயிலடும் நேரம்..


கருப்பு மேகமெல்லாம்
கால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....

மழையெனும் மகள்
மண்ணுக்கு
முத்தமிடும் கோலம்

மழையிட்ட முத்தத்தில்
மண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....

தாகம் கொண்ட
செடிகள் எல்லாம்
தண்ணீர் தாகம் தீர.....

வானம் பார்த்த பூமியை
நம்பி வாழும்
பொக்கைவாய் கிழவரும்
வேகம் கொண்டு ஆட

மொத்தத்தில் இது
பொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்

0 comments:

Design by Blogger Templates