உனக்கே உனக்காய்....


உனக்கே உனக்காய் நான் இருக்க
எனக்கே எனக்கென என்னிடம்
ஓர் கவிதை கேட்கிறாய்

சப்த ஸ்வரங்களும் ஒற்றை
ஸ்வரமாகி உன் பெயரை
என்னுள் எழுதிட.........

நாடியும் நரம்பும் உனக்கென துடித்திட
என்னுள் ஒலியை எழுப்பி விட்டு
ஓய்வு எடுக்க நீ சென்று விட்டாய்
மொழியின் சொற்கள் எல்லாம்...............

உன் வழி தேடி காத்து இருக்க
நீ தொட்டு துடைத்த ஒரு
துளி கண்ணீரும் ஓவியமாகி
என் பெயர் எழுதிவிடும்!!!!!!!!!!

உனக்கு ஆதிக்கவும் தெரியும்
சாதிக்கவும் தெரியும் ஆனாலும்
ஆனவமேயின்றி அமைதியாய் வந்து
உனக்கே உனக்கென ஒரு கவிதை கேட்கிறாய்!!!!!!!!!!!!!!

உலகமும் தெரியும் உண்மையும் புரியும்
ஊர் மொத்தமும் உன்னை அறியும்
ஆனாலும் என் அருகில் வந்து
ஆழ்னிலை சொன்னாய்..................

நேற்று அறிந்த உன் முகவரிக்கு
இன்று நான் முதலாளி
உன்னுள் ஒவ்வொருவருக்கும்
ஓரிடம் ஆனால் உன் உள்ளம்
முழுவது என்னிடம்
உன் மொத்த சுழலில் நான் இருக்க!!!!!!!!!!!

நன்றி :எழுத்தோசை

0 comments:

Design by Blogger Templates