உனக்கே நான்

ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை

உன்னைத் தேடித்தான் உலகம் சுற்றப் புறப்பட்டேன்
என்ன அதிசயம் என் வீட்டு வாசலிலே உன்னை
இறக்கி விட்டுப் போனது நீ சுற்றி வந்த தெய்வம்

உன்னை வைத்துக் கொண்டு உலகம் சுற்றிய
களைப்பில்த்தான் புரிந்து கொண்டேன்_ உன்னைவிட
யாரும் எனக்கு பொருத்தமில்லை என்பதை

என்னைக் கைதியாய்ச் சிறைப்பிடிக்க யார் யாரோ
முயற்சித்தார்கள் இறுதியில் நீதான் சிறைப்பிடித்தாய்
கைதியாயல்ல உன் காதலனாய் உன் கணவனாய்
ஆதலால் உனக்கே உரியவன் நான்.


0 comments:

Design by Blogger Templates