இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்
 
இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடித் திரியும்
பொழுதுகளில்

இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்

0 comments:

Design by Blogger Templates