காதலே வருவாயா


உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்

உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான்
விரும்பவில்லை

கவிதைக்காய்
காத்திருப்பதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்

உனக்காய் காத்திருந்து என்
எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே

என்னைக் காக்க வைத்து விட்டு
வரும் போது கவனம் நீந்த நேரிடலாம்
என் கவிதையின் கண்ணீரில்

இன்றாவது காதலைச் சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்

காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்

கன நேரமாய் காத்திருந்தாலும்
நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய் என்று
பொய் சொல்லுகிறேனோ

உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்

0 comments:

Design by Blogger Templates